மஞ்சள்
       நிலாவே

கொஞ்சம்
           நில்லு

மனதின்
       ஆசைகளை

மறைக்காமல்
        நீயும் சொல்லு

உன்
      கண்கள் பாடும்

காதலை
        கவிதையாக சொல்லவா!!

வில்
      அம்புக்கு வீரம் தான்

இலக்கணம்
         என்றால் உன் விழி

அம்புக்கு
       காதல் தான் இலக்கணமா!!

ஆதலால்

திரும்பி
         கொஞ்சம் பார்த்து விடு

விரும்பி
       பார்க்கும் விழிகளுக்கு

மகிழ்ச்சி
       விருந்து அளித்து விடு!!


எதையாவது
      சொல்வாய்

என்று
     எதிர் பார்த்தால்

எதுவுமே
      சொல்லாமல்

மவுனம்
     காக்கிறாய்

என்ன
     வென்றே

புரியாத
      புதிராகிறாய்!!

உன்
     மவுனத்தை உணர்ந்தே

அன்றைக்கு
           மகாண்கள் கூட

இப்படி
     உரைத்தார்களோ

     பெண்
          மனதைபுரிந்தவர்

     என்று
           பிரபஞ்சத்தில்

எவருமில்லை
                  என்று!!

தேநீர்
      கோப்பையோ

உன்
     அருகில்

தேவதை
        நீயோ என்னருகில்

சுழலும்
        விழிகளில்

சுகந்த
      தென்றல் வீச
என்ன
       பேச போகிறாய்

என்னிடத்தில்
       என்பதை எதிர் நோக்குகிறேன்

ஏக்கத்துடன்

இந்த
      இரவு பொழுதில்!!

இரவு வணக்கத்துடன்

தேநீர்
      கோப்பையோ

உன்
     அருகில்

தேவதை
        நீயோ என்னருகில்

சுழலும்
        விழிகளில்

சுகந்த
      தென்றல் வீச
என்ன
       பேச போகிறாய்

என்னிடத்தில்
       என்பதை எதிர் நோக்குகிறேன்

ஏக்கத்துடன்

இந்த
      இரவு பொழுதில்!!


இமைக்க
       மறந்து மறுத்து

விழிகள்
       திறந்து வியந்து பார்க்கும்

உந்தன்
      பார்வையில்

மகிழ்ந்து
       மயங்குகிறேன்

பார்வையின்
        பொருள் புரிந்து

புகழ்ந்து
        பாடுகிறேன்

பூவுலகில்
        புதிதாக முளைத்த

புது
     நிலவு நீ தான் என்று!!!

நிலவே
     நீ மறைந்து கொள்

அவள்
       வருகிறாள்

உன்னோடு
      போட்டியிட அல்ல

தன்
    அழகால் உன்னை

புறமுதுகிட்ட
        ஓட செய்வதற்கு

அதனால்
       மறைந்து கொள்

வெளியில்
        வந்து விடாதே

வந்து
     வீனாக மனம்

நொந்து
      விடாதே!!

காண்டீபம் இல்லாத
அர்ஜூனன்..
கவசகுண்டலம் இல்லாத
கர்ணன்..
புல்லாங்குழல் இல்லாத
கிருஷ்ணன்..
இது போலவே..
நீயில்லாத நான்.!! 💕


அழகை
          ரசிக்க

அனுமதி
           கொடு
இரு
     விழிகளுக்கு

    உன்
         புன்னகை

மொழியால்!!!


       வெட்கமே
            உந்தன்

விலை
          என்ன
நீ
    என்னவளை

ஆட்
     கொள்வதால்

நான்
     அவள் பக்கம்

வர
    முடியாமல்

தவிப்பதை
           அறிவாயா   நீ!!!



நாம்
     இருவரும்

ஒருவருக்கு
           ஒருவர்

நேசித்த
       நினைவுகளை

சுவாசித்த
        கனவுகளை

இப்பொழுது
         யோசிக்க தொடங்குகிறாய்

விழிகளில்
         இளமையை நிரப்பி

இதழ்களில்
        இனிமையை பரப்பி

விரல்கள்
        தீண்டும் வெட்கத்தால்

என்னை
        ரசிக்க செய்தே!!


மகரந்தம்..
உறியும்..
வண்டு..

இதுவல்லவோ..
உனது..
தொண்டு..

மலருடன்..
நீ முடிக்கும்..
வண்டு

பறந்து விடாமல்..
இன்னும்..
உண்டு


அச்சம்
      கொண்டு வாழும்

வாழ்க்கை
      அடிமை வாழ்க்கையடா

பிறர்
     எச்சம் உண்டு வாழும்

வாழ்க்கை
      அவமாண வாழ்க்கையடா

அன்பு
       எனும் வாழ்க்கையே

அனைவரும்
       போற்றும் வாழ்க்கையடா

முண்டாசு
       கவிஞனின் நிணைவு நாள்

புரட்சி
       முழக்கமிட்ட புலவனின்

பொன்
       மொழிகளை போற்றுவோம்!!


புவியே
          வியக்கும்

கவியே
         மயங்கும்

 வண்ணத்தில்
          உலவும்

உன்னை
            படைத்த

அந்த
     பிரம்மனும்

பார்த்து
      வியப்பான்

உன்னை
      கண்ட பின்

தன்னையே
       மறப்பான்

இத்துனை
       பேரழகை

எப்படி
      படைத்தோம்

என்று
      தனக்கு தானே

 மகிழ்ந்து
            நகைப்பான்!!

இரவு
     வணக்கத்துடன்!!

அன்பெனும்
       பண்பு கொண்டு

அறிவெனும்
         ஆயுதம் ஏந்தி

அறத்தொண்டாம்
         கல்வி பணியில்

தன்னை
        முழுமையாக

அர்பணித்து
         தேவையாக கருதாமல்

அறச்சேவையாக
          செய்து பயணிக்கும்

எங்கள்
        அன்பு நட்புறவுக்கு

நல்லாசிரியர்
         விருது வழங்கிய

ஆன்றோர்களுக்கு
          அறிவு சான்றோர்களுக்கு

எங்கள்
       இதயம் மகிழும்

நன்றி
     கலந்த நல் வணக்கங்கள்!!

நீதானே என் உலகம்

ஓரே உலகம் தான் நீ அருகில் நிற்கும் போது சொர்கமாகவும் சற்று தள்ளி நின்றால் நரகமாகவும் தெரிகின்றது